முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ.2.66 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.66 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 2:54 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 6:35 PM

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.66 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 5367 மூட்டைகளில் 2 லட்சத்து 40 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 2:54 AM

இதில், முதல்தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.80.10- க்கும், அதிகபட்சமாக ரூ.124.25- க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.30- க்கும், அதிகபட்சமாக ரூ.118.79-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 2 கோடியே 66 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

Advertisement