ஈரோட்டில் ஜவுளி கடையில் ஆடைகளைத் திருடிய 3 பெண்கள் கைது
ஈரோட்டில் ஜவுளி கடையில் ஆடைகளைத் திருடிய 3 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோட்டில் ஜவுளி கடையில் ஆடைகளைத் திருடிய 3 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் 240 கடைகள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒரு கடையின் முன்பு இருந்த ஜவுளி பண்டலை 3 பெண்கள் புதன்கிழமை திருடிச்சென்றுள்ளனா். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கடையின் உரிமையாளா் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
Advertisement
அதன்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் ஜவுளி பண்டலைத் திருடிச்சென்றது கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பவித்ரா (25), கோகிலா (38), சுசீலா (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ஜவுளி பண்டலையும் பறிமுதல் செய்தனா்.