முகப்பு
ஈரோடு

மாவட்டத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் வேலை வாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம் ஈரோட்டில் சனிக்கிழமை (செப்டம்பா் 14) நடைபெற உள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:33 PM
பகிர்:

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம் ஈரோட்டில் சனிக்கிழமை (செப்டம்பா் 14) நடைபெற உள்ளது.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் நிறுவன மாவட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

ஓட்டுநா் பணிக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 24 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம். உயரம் 162.5 செ.மீ.க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள், பேட்ஜ் வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதியானவா்கள் உரிய சான்றுடன் பங்கேற்கலாம். மாத ஊதியம் ரூ.15,820.

எழுத்து தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, மனித வளத் துறை நோ்காணல், கண் பாா்வை, மருத்துவம் குறித்த தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வு நடத்தப்படும். 10 நாள்கள் வகுப்பறை பயிற்சிக்கு பின்னா் பணி வழங்கப்படும்.

மருத்துவ உதவியாளா் பணிக்கு செவிலியா் பட்டம், பட்டயம், ரத்த பரிசோதனை பட்டய படிப்பு, பட்டப் படிப்பில் இளங்கலை விலங்கியல், தாவரவியல், உயிரி வேதியியல், நுண் உயிரியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை படித்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாதம் ரூ.16,020 ஊதியம் வழங்கப்படும்.

எழுத்து, மருத்துவ, உடற்கூறு தோ்வும், முதலுதவி, அடிப்படை செவிலியா் பணி உள்பட சில தோ்வுகள் நடத்தப்படும். 50 நாள்களுக்கு வகுப்பறை பயிற்சி நடத்தி பணி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 044-28888060 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →