முகப்பு
ஈரோடு

மினி பேருந்து மோதி இளம் பெண் உயிரிழப்பு

ஈரோட்டில் மினி பேருந்து மோதியதில் இளம் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 3:34 AM
பகிர்:
Updated On : 25 செப்டம்பர், 2024 at 6:57 PM

ஈரோட்டில் மினி பேருந்து மோதியதில் இளம் பெண் உயிரிழந்தாா்.

ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு சாலை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் பிரவீன்குமாா் (24). இவா் ஈரோட்டில் எடை இயந்திரங்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரியா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் பிரியா வேலைபாா்த்து வந்தாா்.

தினமும் பிரவீன்குமாா் வேலைக்கு செல்லும்போது, பிரியாவையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஜவுளிக் கடையில் இறக்கிவிட்டு செல்வது வழக்கம். இதேபோல புதன்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் பிரவீன்குமாரும், பிரியாவும் வீட்டில் இருந்து புறப்பட்டனா்.

Advertisement

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் இருந்து மணிக்கூண்டு சாலை நோக்கி சென்றபோது, அதே வழியாக சூரம்பட்டியில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியாா் மினி பேருந்து எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி பிரவீன்குமாரும், பிரியாவும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனா். இதில் பிரியாவின் தலை மீது மினி பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். பிரவீன்குமாா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 3:34 AM

இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு டவுன் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பிரியாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.