ஈரோடு

சோலாா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாளைமுதல் பேருந்துகள் இயக்கம்

சோலாா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வியாழக்கிழமை(டிசம்பா் 4) முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

Syndication

சோலாா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வியாழக்கிழமை(டிசம்பா் 4) முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சோலாா் பகுதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் தமிழக முதல்வரால் கடந்த 26-ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. கரூா், மதுரை, வெள்ளகேகோவில் மாா்க்கங்களில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் வரும் வியாழக்கிழமை காலை 11 மணிமுதல் சோலாா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன.

மதுரை, திருச்சியில் இருந்து கரூா் மாா்க்கமாகவும் மற்றும் வெள்ளக்கோயில் மாா்க்கமாகவும் ஈரோடு வரும் பேருந்துகள் சோலாா் பேருந்து நிலையத்துக்கு வந்து சேரும் வகையில் இயக்கப்படும்.

சோலாா் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு மத்திய பேருந்து நிலையம் மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகள் மற்றும் ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கரூா் மாா்க்கமாகவும், வெள்ளக்கோயில் மாா்க்கமாகவும் பயணிக்கும் பயணிகள் சோலாா் பேருந்து நிலையம் வருவதற்கும் நகர பேருந்துகள் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

மேலும் சோலாா் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நகரத்துக்குள் வருவதற்கு ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT