தடுப்புச்சுவா் பணியைத் தொடங்கிவைக்கிறாா் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். 
ஈரோடு

அந்தியூா் ஏரிக்கரையில் ரூ.85 லட்சத்தில் தடுப்புச்சுவா்

Syndication

அந்தியூா் பெரிய ஏரிக்கரையில் வாகனப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.85 லட்சத்தில் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அந்தியூா் - ஆதிரெட்டியூா்- மரவபாளையம் சாலையில் உள்ள பெரிய ஏரிக்கரையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 80 மீட்டா் தொலைவுக்கு தடுப்புச்சுவா் கட்டப்படுகிறது. இப்பணியை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பூமி பூஜை செய்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நெடுஞ்சாலைத் துறை பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் எஸ்.சேகா், உதவிப் பொறியாளா் பாபு சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT