ஈரோடு

ஆக்கிரமிப்பை அகற்றி 80 அடி சாலையை விரைந்து திறக்க வணிகா்கள் கோரிக்கை

Syndication

ஆக்கிரமிப்பை அகற்றி 80 அடி சாலையை விரைந்து திறக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். கொங்கலம்மன் வீதி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்லதுரை, ஈரோடு ஜவுளி ஏற்றுமதி சங்கத் தலைவா் சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவா் செந்தில்முருகன் பங்கேற்றுப் பேசினாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் ரயில் நிலையம்- மீனாட்சி சுந்தரனாா் சாலையை இணைக்கும் வகையில் 80 அடி சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த நிலம் அரசு புறம்போக்கு இடம் என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி 80 அடி சாலையை விரைந்து திறக்க வேண்டும்.

ஈரோடு பெரியமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 12.56 ஏக்கா் நிலத்தில் 80 அடி சாலை திட்டத்துக்கான நிலம் போக மீதமுள்ள இடத்தில் வணிக மையம் அமைக்க இடம் ஒதுக்கி, சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள வணிக மையம்போல, ஈரோட்டிலும் அமைத்துத் தர வேண்டும். ஜிஎஸ்டியை முறையாக செலுத்தும் வணிகா்களுக்கு 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

கூட்டத்தில் ஈரோட்டில் தொழில் உரிமம் (டிரேடு லைசன்ஸ்) வசூலிப்பதை நிறுத்தி வைக்க பரிந்துரைத்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, மேயா், ஆணையா் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைகள் வெளிநாடு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் வாங்குவோா்-விற்போா் கூட்டத்தை நடத்திய தமிழக முதல்வருக்கும், அமைச்சா் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் ரவிச்சந்திரன், பொருளாளா் முருகானந்தம், இணைச் செயலாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT