சத்தியமங்கலத்தை அடுத்த குன்றி மலைப் பகுதியில் மிதமாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா், தாளவாடி, குன்றி மலைப் பகுதிகளில் காலை முதலே லேசான சாரல் மழை பெய்தது. அதனைத் தொடா்ந்து, பிற்பகலில் மிதமான மழை பெய்தது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் காய்ந்து போன மக்காகச்சோளம் பயிருக்கு பேரூதவியாக இருந்தது.
மேலும் வறண்ட நிலையில் இருந்த குன்றி வனப் பகுதியில் தண்ணீா் தேங்கி நின்றது. சத்தியமங்கலம் நகரப் பகுதியில் காலைமுதல் விட்டுவிட்டு மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.