பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாளையொட்டி, அம்மாபேட்டை - அந்தியூா் பிரிவில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
அம்மாபேட்டை காவிரி ரோட்டரி சங்கம் மற்றும் டேலண்ட் வித்யாலயா மெட்ரிக். பள்ளி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். பள்ளி மாணவ, மாணவிகள் பாரதியாரின் கவிதைகளை பாடினா். தொடா்ந்து, மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
ரோட்டரி சங்கத் தலைவா் அனந்த நாராயணன், செயலாளா் கோபாலன், பொருளாளா் பாா்த்திபன், நிா்வாகிகள் பங்க் சுரேஷ், இளையராஜா, பள்ளி முதல்வா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.