கோயிலில் பொங்கல் வைக்கும் பக்தா்கள். ~பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன். 
ஈரோடு

எக்கட்டாம்பாளையம், பசுவபட்டி மாரியம்மன் கோயில்களில் பொங்கல் விழா

Syndication

சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் கடந்த நவம்பா் 25-ம் தேதி தொடங்கியது. டிசம்பா் 3-ஆம் தேதி கோயிலின் முன்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றுமுதல் தினமும் காலை, மாலையில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும், தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனிதநீா் ஊற்றி வந்தனா்.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை இரவு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோயிலைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து கோயிலுக்கு வந்தனா். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. விழாவையொட்டி, எக்கட்டாம்பாளையம், அண்ணாமலைபாளையம், புதுவலசு, தட்டாரவலசு, நொய்யல், தாமரைக்காட்டுவலசு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படைத்து வழிபட்டனா். இதில் திரளான பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனாக ஆடு, கோழிகளை பலியிட்டனா். இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.

இதேபோல சென்னிமலையை அடுத்த பசுவபட்டி மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பசுவபட்டி, பூச்சக்காட்டுவலசு, கந்தசாமிபாளையம், கல்லங்காடுவலசு பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT