போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன்  பள்ளி  முதல்வா் சியாமளா  தேவி. 
ஈரோடு

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி: பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளி சிறப்பிடம்

Syndication

ஈரோடு மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பல்வேறு பிரிவில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடப்பு கல்வியாண்டுக்கான மாவட்ட வருவாய் அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஈரோட்டில் நடைபெற்றன. மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்ற நிலையில், சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் வித்யா நிகேதன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களும் பங்கேற்றனா்.

இதில் 50 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவு போட்டியில் எஸ்.பி. ஓம்காா், 45 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவு போட்டியில் எம்.மிகுலன் மற்றும் 10 கிலோவுக்கு மேல் எடைப் பிரிவு போட்டியில் எஸ்.பிரகதி ஆகியோா் முதல் பரிசை பெற்றனா். இவா் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்க உள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், பள்ளியின் செயலாளா் எஸ்.முருககனி, பண்ணாரிஅம்மன் கல்லூரி முதல்வா் பழனிசாமி மற்றும் டீன்கள் சிவகுமாா், அமா் காா்த்தி மற்றும் பள்ளி முதல்வா் சியாமளா தேவி ஆகியோா் வாழ்த்தினா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT