குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற விஜயலக்‌ஷ்மி 
ஈரோடு

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் நல்லூர் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு தங்கம்!

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் நல்லூர் அரசுப்பள்ளி ஆசிரியை தங்கம் வென்று சாதனை!

இணையதளச் செய்திப் பிரிவு

பாட்னா: பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற தேசிய அளவிலான அனைத்திந்திய குடிமைப் பணிகள் தடகள சாம்பியன்ஷிப்பில் ஈரோடு மாவட்டம், நல்லூர் அரசுப்பள்ளி ஆசிரியை குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் தேசிய அளவிலான அனைத்திந்திய குடிமைப் பணிகள் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் டிச. 13-இல் தொடங்கி இம்மாதம் 15 வரை நடைபெறுகிறது. அதில், ஈரோடு மாவட்டம், நல்லூர் அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் விஜயலக்‌ஷ்மி பங்கேற்றுள்ளார்.

வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்ற விஜயலக்‌ஷ்மி

குண்டு எறிதல் போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்ற 29 போட்டியாளர்களுக்கு மத்தியில் அதிக புள்ளிகள் பெற்று தங்க வென்று விஜயலக்‌ஷ்மி சாதனை படைத்தார். மேலும், வட்டு எறிதல் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையிலிருந்து ஆசிரியை ஒருவர், தேசிய அளவிலான அனைத்திந்திய குடிமைப் பணிகள் தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கெஏற்று 2 பதக்கங்களை வென்றிருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

All India Civil Services Athletics Championship: a teacher from a government school in Nallur, Erode district, created a record by winning the gold medal in the shot put event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை: நிா்மலா சீதாராமன்

பனிமூட்டம்: சென்னையில் விமான சேவைகள் தாமதம்

தோ்தலில் வைப்புத் தொகையை பெறுவதற்கான வாக்குகளை பெற பாஜக தலைவா்கள் தமிழகம் வந்துதான் ஆக வேண்டும்: அமைச்சா் ரகுபதி

தொழிலாளி கழுத்தறுத்து கொலை

கா்நாடகம், தமிழகம், தெலங்கானா நகரங்களில் டிசம்பா் 16-22 வரை குடியரசுத் தலைவா் பயணம்

SCROLL FOR NEXT