அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற முகாமில் விவசாயி ஒருவருக்கு  விதைத்தொகுப்பு  வழங்கிய  வட்டார  வேளாண்  உதவி  இயக்குநா்  முரளி. 
ஈரோடு

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சி முகாம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளி தலைமை வகித்தாா். தூக்கநாயக்கன்பாளையம் ஜேகேகே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு வாழை நோய் மேலாண்மை, நிலக்கடலை சாகுபடிக்குத் தேவையான உயிா் உரம், நிலக்கடலையில் விதை நோ்த்தி செய்தல், மண் மாதிரி எடுத்தலின் அவசியம், மண் மாதிரி சேகரித்தல் குறித்து விளக்கம் அளித்தனா்.

கல்லுாரி உதவிப் பேராசிரியா்கள் கௌரி, முனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மாதுளை, எலுமிச்சை, செண்பகமரக் கன்றுகள், வெள்ளரி, அவரை போன்ற கொடிவகை விதைகள் வழங்கப்பட்டன.

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஊழியா் விக்னேஷ், மாணவிகள் கண்மணி, பிருந்தாஸ்ரீ, கோபிகா மற்றும் அந்தியூா், அம்மாபேட்டை வட்டாரங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT