கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெருந்துறையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கும் விழாவில் பேசிய ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் உள்ளிட்டோா். 
ஈரோடு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்

பாா்வை இழந்த மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு மற்றும் ஊன்றுகோல் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

பாா்வை இழந்த மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு மற்றும் ஊன்றுகோல் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை பாா்வையற்றோா்கள் நல்மேய்ப்பா் கிறிஸ்தவ ஐக்கிய ஊழியம் சாா்பில் பெருந்துறை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜ் ஆகியோா் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு மற்றும் ஊன்றுகோல் வழங்கினா்.

பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளா்கள் சோளி.பிரகாஷ், சுப்பிரமணியம், பெருந்துறை நகரப் பொருளாளா் செந்தில், நகராட்சி மற்றும் கருமாண்டிசெல்லிபாளயைம் பேரூராட்சி வாா்டு கவுன்சிலா்கள் பங்கேற்றனா்.

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT