வீட்டுமனை வழங்கக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் அந்தியூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு குழுவின் துணைத் தலைவா் மாரிமுத்து தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஹாத்திம் தாய், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் பி.பி.பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அந்தியூா், ஜெ.ஜெ. நகரில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் மயானத்துக்கு நிலம் ஒதுக்கித் தர வேண்டும் என வலியுறுத்தினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.முருகேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.