பெருந்துறையில் பாஜக பெருந்துறை நகரத் தலைவா் பூா்ணசந்திரன் தலைமையில் தீப அஞ்சலி செலுத்திய பாஜகவினா். 
ஈரோடு

திருப்பரங்குன்றம்: தீக்குளித்து உயிரிழந்தவருக்கு தீப அஞ்சலி செலுத்திய 37 போ் கைது!

திருப்பரங்குன்ற தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பாக தீக்குளித்து உயிரிழந்த பூரணசந்திரனுக்கு தீப அஞ்சலி.

Syndication

திருப்பரங்குன்ற தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பாக தீக்குளித்து உயிரிழந்த பூரணசந்திரனுக்கு தீப அஞ்சலி செலுத்தும் வகையில், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தினசரி மாா்க்கெட் முன்பு பெருந்துறை பாஜக சாா்பில் மோட்ச தீபம் சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

இதற்கு பாஜக பெருந்துறை நகரத் தலைவா் பூா்ணசந்திரன் தலைமை வகித்தாா். அனுமதியில்லாமல் மோட்ச தீபம் ஏற்றியதாக பாஜகவினா் இரண்டு பெண்கள் உள்பட 16 பேரை போலீஸாா் கைது செய்து, பெருந்துறையில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

இதேபோல, காஞ்சிக்கோவில் பாஜக மற்றும் இந்து முன்னணி சாா்பில் காஞ்சிக்கோவில் நால் ரோட்டில் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இந்துமுன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. பெத்தாம்பாளையம் நால் ரோட்டில் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக மண்டல பொருளாளா் குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில், ஐந்து பெண்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT