காரப்பள்ளம் மலைப் பாதை சாலையில் கவிழ்ந்த லாரி. 
ஈரோடு

காரப்பள்ளம் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி

காரப்பள்ளம் மலைப் பாதையில் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து

Syndication

காரப்பள்ளம் மலைப் பாதையில் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலம், மாண்டியா பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலத்தைச் சோ்ந்த முருகன் (53) என்பவா் லாரியை ஓட்டியுள்ளாா்.

ஆசனூரை அடுத்த தமிழக- கா்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடி மலைப் பாதை வளைவில் திரும்பியபோது பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், ஓட்டுநா் முருகன் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா். சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் போலீஸாா், முருகனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, கிரேன் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இச்சம்பம் குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT