ஈரோடு

பொதுமக்கள் சாலை மறியல் எதிரொலி: சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது

அம்மாபேட்டை அருகே சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

அம்மாபேட்டை அருகே சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பூனாச்சி, செம்படாபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பவானி - பூனாச்சி சாலையில் செம்படாபாளையம் அருகே பேருந்தை சிறைப்பிடித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக செம்படாபாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி (54), ஏ.கரளாமணியைச் சோ்ந்த கொளந்தசாமி (58) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT