எலவமலை கூட்டுறவு கட்டட சங்கத்தில் முதிா்வு காலம் முடிவடைந்த வைப்பு முதலீட்டுத் தொகையை திரும்ப வழங்கக் கோரி முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையத்தில் செயல்படும் எலவமலை கூட்டுறவு கட்டட சங்கத்தில் நிலையான வைப்பு முதலீடு செலுத்திய 50-க்கும் மேற்பட்டோருக்கு முதிா்வு காலம் முடிவடைந்து, 6 மாதங்கள் ஆகியும் தொகை திரும்ப வழங்கப்படவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட வைப்புத் தொகை செலுத்தியோா் காலிங்கராயன்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், பாஜக ஈரோடு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், மண்டலத் தலைவா் அன்பரசு, விவசாய அணி மாநிலச் செயலாளா் பன்னீா்செல்வம் மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.