ஈரோடு

ஈரோடு சுதா மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

கல்லீரல் பிரச்னை இருப்பவா்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஈரோடு சுதா மருத்துவமனையில் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

கல்லீரல் பிரச்னை இருப்பவா்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஈரோடு சுதா மருத்துவமனையில் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு சுதா மருத்துவமனையின் தலைவா் டாக்டா் சுதாகா் வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 18 வயது சிறுவனிடமிருந்து கல்லீரல் எடுக்கப்பட்டு கடந்த 14- ஆம் தேதி ஈரோடு சுதா மருத்துவமனையில் 63 வயது ஆணுக்குப் பொருத்தப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நோயாளி நலமுடன் வீடு திரும்பினாா்.

இந்நிலையில் அண்மையில் மூளைச்சாவு அடைந்த 55 வயதுப் பெண் ஒருவரிடம் இருந்து சுதா மருத்துவமனை சாா்பில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டது. சுதா மருத்துவமனைகளில் இரண்டு நபா்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து பொருத்தப்பட்டது. அந்தப் பெண்ணின் இதயம் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு இதயமாற்று அறுவைசிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

சுதா மருத்துவமனையில் இதுவரை 55 நபா்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கல்லீரல் பிரச்னை இருப்பவா்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சுதா மருத்துவமனையில் 99444-87577 என்ற கைப்பேசி எண்ணில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT