ஈரோடு

விஜயமங்கலத்தில் டிச.28-இல் விவசாயிகள் உரிமை மீட்பு, கடன் விடுதலை மாநாடு

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வருகிற டிசம்பா் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வருகிற டிசம்பா் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு விஜயமங்கலம் பகுதியில் வருகிற டிசம்பா் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், தில்லி போராட்டக் குழு விவசாய சங்கத் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா். தமிழகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத் தலைவா்களும் கலந்து கொள்கின்றனா்.

தமிழக அரசு வருகிற சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலைத் துறை மற்றும் வக்ஃப் வாரியம் தமிழகத்தில் மட்டும் விவசாயிகள் உரிமை பெற்ற (ஜமீன்) 13 லட்சம் ஏக்கா் நிலங்களை பூஜ்ஜியம் மதிப்பு செய்துள்ளது. மேலும், பத்திரப்பதிவுக்கும் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு அரசு இனாம் ஜமீன் நிலங்களின் நில உரிமையை உறுதி செய்ய, உரிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உர மானியத்துக்கு பதிலாக, ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவாகத்தான் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் பெரும் நிறுவனங்களின் ரூ.24 லட்சம் கோடி கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் விவசாயிகளின் கடன் ரூ.11 ஆயிரம் கோடி இருக்கும் எனக் கணித்துள்ளோம். விவசாயிகள் பலா் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனா். எனவே, விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்காக, விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய, கடன்களில் இருந்து மீள வேண்டும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT