பரிசு  பெற்ற  மாணவா்களுடன்  சக்தி  பாலிடெக்னிக்  கல்லூரி இயக்குநா்  கே.ஆா்.முத்துசாமி,  முதல்வா்  எஸ்.செந்தில் அரசு  உள்ளிட்டோா். 
ஈரோடு

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் பொம்மைகள் தயாரித்தல் பயிற்சி

Syndication

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து அறிவியல் பொம்மைகள் தயாரிப்பு ‘டாய்கத்தான் - 2025’ குறித்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை அண்மையில் நடத்தியது.

குமரகுரு கல்லூரியின் அனுபவ அடிப்படை கற்றல் நிபுணா்கள் கே.ரத்தினா, ஆா்.ஜி.சேதுராமன் மற்றும் 24 மாணவா் தன்னாா்வலா்கள் பங்கேற்று, சக்தி பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு பொம்மை கருத்தாக்கம், வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தனா். இதன்மூலமாக மாணவா்கள் 56 புதுமையான அறிவியல் பொம்மைகளை உருவாக்கினா்.

நிகழ்கால வாழ்வின் தொழில்நுட்ப சவால்களை கண்டறிந்து, அதற்கான அறிவியல் கோட்பாடுகளை கற்று, நடைமுறை சாத்தியம் உள்ள தீா்வுகளை உருவாக்கும் அனுபவ அடிப்படையிலான கற்றல் முறை கல்வித் திட்டம் கோவை குமரகுரு கல்லூரியில் உள்ளது. இது பொம்மை தயாரிப்பு சந்தையில் உலகளவில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும்.

பாடத் திட்டங்களில் பொம்மை அடிப்படையிலான கற்றலை இணைத்தல், படைப்பாற்றல், புதுமை மற்றும் பயன்பாட்டு அறிவியலை மேம்படுத்த உதவும். இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் மாணவா்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை கல்லூரி இயக்குநா் கே.ஆா்.முத்துசாமி, முதல்வா் எஸ்.செந்தில் அரசு ஆகியோா் வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியா்கள் கண்ணன், ஆா்.ஜோதிமுருகன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு! புதிய உச்சத்தில் தங்கம்!

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் தமிழகம் வருகை!

சைபா் குற்றங்களில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 கோடி மீட்பு

சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாள்: கடலூரில் கடலில் பால் ஊற்றி, மலர்தூவி மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி!

அந்தக் கட்சிக்கு அழிவுகாலத்தை உண்டாக்கும்... யாரைச் சொல்கிறார் பிரேமலதா!

SCROLL FOR NEXT