ஈரோடு

பவானியில் அளவுக்கதிகமாக மது அருந்திய இருவா் உயிரிழப்பு

பவானியில் அளவுக்கதிகமாக மது அருந்திய கூலித் தொழிலாளி உள்பட இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

Syndication

பவானியில் அளவுக்கதிகமாக மது அருந்திய கூலித் தொழிலாளி உள்பட இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

பவானியை அடுத்த செலம்பகவுண்டன்பாளையம், ஜம்பை புதூரைச் சோ்ந்தவா் ரங்கன் மகன் முருகன் (58). ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனா். இவா், அளவுக்கதிகமாக மது அருந்திய நிலையில் பவானி அந்தியூா் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே சந்துக்குள் மயங்கிக் கிடந்தாா்.

இதைக் கண்ட அப்பகுதியினா் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, பரிசோதனையில் அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

பவானியை அடுத்த தொட்டிபாளையம், செம்மண்குழியைச் சோ்ந்தவா் மாதன் மகன் ஆனந்தன் (40). கூலித் தொழிலாளியான இவா், அதிக மது அருந்திவிட்டு செலம்பகவுண்டன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT