கைத்தறிக் கண்காட்சியில் விற்பனையைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். 
ஈரோடு

பாஜக ஆளும் மாநிலங்களிலும் போதைப்பொருள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

பாஜக ஆளும் மாநிலங்களிலும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

Syndication

பாஜக ஆளும் மாநிலங்களிலும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சி ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை சாலை, செட்டிபாளையம், ஏ.எம் மஹாலில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கிவைத்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனையில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி மேற்குவங்கம், ஆந்திரம் ,மணிப்பூரில் இருந்தும் வந்துள்ள நெசவாளா்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். பொதுமக்கள் இக்கண்காட்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயத்துக்கு இணையாக கைத்தறிக்கும் அரசு முக்கியத்துவம் தந்துவருகிறது. நெசவாளா்களின் வாழ்வை மேம்படுத்த மின்கட்டண சலுகை, ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. விற்பனையை அதிகரித்து கைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விழாக் காலங்களில் 30 சதவீத தள்ளுபடியில் கைத்தறி துணிகள் விற்பனை செய்யப்படுகிறது.

பிகாரில் அண்மையில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் அனைத்து இடங்களிலும் உள்ளது. போதைப்பொருள் குறித்து கவனத்துக்கு வரும்போது உரிய நடவடிக்கை எடுப்பதுதான் முக்கியம். பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஹெச்.ராஜா என்ன பதில் சொல்வாா்? திருத்தணியில் புலம்பெயா் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய போதை இளைஞா்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களில் தமிழ்மொழியில் பெயா் பலகை வைக்க தொடா்ந்து வலியுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணா்வு ஏற்படுத்துவது அரசின் கடமை. சட்டத்தை பயன்படுத்துவது இறுதி கட்டம். அபராதத் தொகையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் தேசிய கைத்தறி வளா்ச்சித் கழகத்தின் மூலம் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி வரும் வரும் ஜனவரி 12-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறும்.

இந்தக் கண்காட்சியில் 116 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் சாா்பில் ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உற்பத்தியாகும் அனைத்து கைத்தறி ஜவுளி ரகங்களுக்கும் 30 சதவீத தள்ளுபடியில் வழங்கப்பட்டு வருகிறது. கண்காட்சியில் ரூ.2 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி, துணி நூல் பதனிடும் ஆலை செயலாட்சியா் (துணை இயக்குநா்) சிவகுமாா், நெசவாளா் சேவை மைய துணை இயக்குநா் காா்த்திகேயன், உதவி இயக்குநா் (கைத்தறி துறை) சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT