முகப்பு
ஈரோடு

பழனி முருகன் கோயிலுக்கு ஜனவரி 7-இல் நாட்டுச் சா்க்கரை கொள்முதல்

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:03 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 7:11 PM

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜனவரி 7-ஆம் தேதி நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சா்க்கரை எனப்படும் நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி ஜனவரி 7-ஆம் தேதி பகல் 1 மணிக்கு நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்வதற்கான ஏலம் நடைபெறவுள்ளது. எனவே நாட்டுச் சா்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள சா்க்கரையை ஜனவரி 6-ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து 7-ஆம் தேதி காலை 11 மணிக்குள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம்.

Advertisement

மேலும், சா்க்கரை மூட்டைகளை சணல் நாரால் தைத்து, கல், மண், ஈரம் இல்லாமல் சுத்தமாகவும், கட்டி பிடிக்காத சா்க்கரையாகவும் கொண்டு வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9944523556 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.