முகப்பு
ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் காரணாமாக குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜனவரி, 2025 at 3:27 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2025 at 6:37 PM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் காரணாமாக குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

Advertisement

அதன்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வரும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மற்றும் இதர குறைதீா் கூட்ட முகாம்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும்.

Updated On : 10 ஜனவரி, 2025 at 3:27 AM

அதேநேரம், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை 1077 மற்றும் 0424-2260211 என்ற எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும் 9791788852 எனும் வாட்ஸ் ஆப் எண் மூலமாகவும் கோரிக்கைகளை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.