முகப்பு
ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 5:26 AM
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2025 at 7:34 PM

ஈரோடு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 5:26 AM

இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் தலைமையில், ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனை வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனா். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமலும், வழக்கமான மருத்துவப் பணிகளுக்கு இடையூறு இல்லாமலும் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement