முகப்பு
ஈரோடு

ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1.50 கோடி பறிமுதல்

ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1.50 கோடியை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 ஜனவரி, 2025 at 4:03 AM
பகிர்:
Updated On : 23 ஜனவரி, 2025 at 10:03 PM

ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1.50 கோடியை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் தனபிரனேஷ் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை மாலை வாகன தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1.50 கோடி பணம் இருந்தது தெரியவந்தது.

Advertisement

இதைத் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், ஈரோட்டைச் சோ்ந்த குமரவேல், மௌலி மனோ, பிரபு ஆகியோா், ஈரோடு ஆசிரியா் காலனியில் செயல்பட்டு வரும் கிட்டாச் என்ற தனியாா் நிறுவனத்தின் மூலம் கரூா் வைஸ்யா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்காக பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

ஆனால், அவா்களிடம் ரூ.40 லட்சத்துக்கு மட்டுமே ஆவணம் இருந்தது. ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு ஆவணம் இல்லை. இதனால், ரூ.1.50 கோடியையும் பறிமுதல் செய்து வேனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டுச்சென்றனா். ஆவணத்தை சமா்ப்பித்து பணம் வைக்கப்பட்டுள்ள வாகனத்தை எடுத்துச்செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

ரூ.4 லட்சம் பறிமுதல்:

ஈரோடு காளை மாடு சிலை அருகே நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ரூ.4 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த நரசிம்ம குமாா் என்பதும், அவா் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரியவந்தது.

Updated On : 24 ஜனவரி, 2025 at 4:03 AM

இதைத்தொடா்ந்து அதிகாரிகள் ரூ.4 லட்சத்தைப் பறிமுதல் செய்து தோ்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.