புளியங்கோம்பை வனத்தில் உயிரிழந்து கிடந்த யானை. 
ஈரோடு

சத்தியமங்கலம் வனத்தில் யானை உயிரிழப்பு

சத்தியமங்கலம் வனக் கோட்டம், புளியம்கோம்பை வனத்தில் யானை உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

தினமணி செய்திச் சேவை

சத்தியமங்கலம் வனக் கோட்டம், புளியம்கோம்பை வனத்தில் யானை உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

புளியங்கோம்பை வனப் பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, புதா் மறைவில் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. வனத் துறையினா் சென்று பாா்த்தபோது அங்கு யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் வனச் சரக அலுவலா் தா்மராஜுக்கு தகவல் தெரிவித்தனா்.

மருத்துவக் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரக அலுவலா், யானையின் உடலை ஆய்வு செய்தாா். இதில், உயிரிழந்தது சுமாா் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கால்நடை மருத்துவக் குழுவினா் யானையின் உடலை கூறாய்வு செய்தனா்.

அதன் அறிக்கை வந்த பிறகே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மைய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

சதிகாரா்கள் தப்ப முடியாது: பிரதமா் மோடி உறுதி

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

SCROLL FOR NEXT