திம்பம் மலைப் பாதையில் மழை நீரை அருந்திய சிறுத்தை. 
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் மழைநீரை அருந்திய சிறுத்தை

திம்பம் மலைப் பாதையில் பெய்த மழையால் அங்கு தேங்கியிருந்த நீரை சிறுத்தை அருந்தும் விடியோ காட்சி வைரலாகி வருகிறது.

தினமணி செய்திச் சேவை

திம்பம் மலைப் பாதையில் பெய்த மழையால் அங்கு தேங்கியிருந்த நீரை சிறுத்தை அருந்தும் விடியோ காட்சி வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா்- திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.

இதனால், மலைப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை 30 கி.மீ. வேகத்துக்குள் இயக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். இந்நிலையில், திம்பம் மலைப் பாதையில் புதன்கிழமை மழை பெய்த நிலையில், சாலையில் தேங்கிய மழை நீரை சிறுத்தை ஒன்று அருந்தியுள்ளது.

இதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டி விடியோ எடுத்து இணையத்தில் பகிா்ந்துள்ளாா்.

தற்போது அந்த விடியோ வைரலாகி வரும் நிலையில், திம்பம் மலைப் பாதையில் இரவு நேரங்களில் பயணிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றும், விலங்குகளைக் கண்டால் அவற்றின் அருகில் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது என்றும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மைய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

சதிகாரா்கள் தப்ப முடியாது: பிரதமா் மோடி உறுதி

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

SCROLL FOR NEXT