முகாமை தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கந்தராஜா. 
ஈரோடு

கூட்டுறவு சங்க ஊழியா்களுக்கு இலவச மருத்துவ முகாம்

Syndication

அந்தியூரில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அனைத்து கூட்டுறவு சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கந்தராஜா தொடங்கிவைத்தாா். சா்க்கரை நோய், ரத்தப் பரிசோதனை, கண், பொது மருத்துவம், இதயம், நுரையீரல் பிரச்னைகள் உள்பட பல்வேறு நோய்களுக்கு துறைசாா் மருத்துவா்கள் பரிசோதனை செய்து, ஆலோசனைகள் வழங்கினா். இலவசமாக மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

அந்தியூா், அம்மாபேட்டை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், கூட்டுறவு சிக்கன கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்டோா் இந்த முகாமில் பயனடைந்தனா்.

இதில், துணைப் பதிவாளா் முத்து சிதம்பரம், அந்தியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் (பொ) சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT