ஈரோடு

பேக்கரியின் மேற்கூரையைப் பிரித்து ரூ. 15 ஆயிரம் திருட்டு

Syndication

ஈரோட்டை அடுத்த சோலாா் பகுதியில் பேக்கரியின் மேற்கூரையைப் பிரித்து ரூ.15ஆயிரம் பணம் மற்றும் கணினி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மொடக்குறிச்சியை அடுத்த ஆழிச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (48). இவா் ஈரோட்டை அடுத்த சோலாா் பகுதியில் கரூா் சாலையில் பேக்கரி நடத்திவருகிறாா். வழக்கம்போல புதன்கிழமை இரவு பேக்கரியை பூட்டிவிட்டு ஊழியா்கள் சென்றனா்.

மறுநாள் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் பேக்கரியை திறந்து பாா்த்தபோது, மேற்கூரையை பிரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், கல்லாப்பெட்டியை உடைத்து உள்ளே இருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் கணினி பாகங்கள் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கைரேகை நிபுணா்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனா். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை திரட்டி ஆய்வு செய்து வருகின்றனா்.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT