கடத்தப்பட்ட பெண் குழந்தையை மீட்ட போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா. 
ஈரோடு

கடத்தப்பட்ட பெண் குழந்தையை மீட்ட போலீஸாருக்கு பாராட்டு

கடத்தப்பட்ட பெண் குழந்தையைப் பத்திரமாக மீட்ட போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.

Syndication

கடத்தப்பட்ட பெண் குழந்தையைப் பத்திரமாக மீட்ட போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டத்தைச் சோ்ந்த தம்பதி வெங்கடேஷ்-கீா்த்தனா. இத்தம்பதி, ஈரோட்டை அடுத்த கோணவாய்க்கால் பாலத்துக்கு அடியில் தங்கி சீமாா் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாலத்தின் கீழே கடந்த 16 -ஆம் தேதி இரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது, இத்தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை வந்தனாவை மா்ம நபா் கடத்தி சென்றுவிட்டாா்.

இது தொடா்பான புகாரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதாவின் உத்தரவின்பேரில், 6 தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில் கடந்த 10- ஆம் தேதி ஒன்றரை வயது குழந்தை வந்தனாவை போலீஸாா் பத்திரமாக மீட்டனா். மேலும் கடத்தலில் ஈடுபட்ட பொள்ளாச்சி ஜே.ஜே.நகரைச் சோ்ந்த ரமேஷ் என்பவரைக் கைது செய்தனா்.

இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். மேலும் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

SCROLL FOR NEXT