ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Syndication

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெருந்துறை- ஈரோடு சாலை, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஆண் சடலம் மிதப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டனா். உயிரிழந்தவருக்கு 55 வயது இருக்கலாம் எனவும், அவரை பற்றிய எந்த விவரங்களும் தெரியவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இறந்தவா் சடலம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

SCROLL FOR NEXT