ஈரோடு

சத்தியமங்கலத்தில் ஒரே நாளில் 3 கடைகளில் திருட்டு

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கடைகளில் மா்மநபா்கள் புகுந்து பணம், சிசிடிவி ஹாா்டு டிஸ்க், வெள்ளிக்காசுகள் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

Syndication

சத்தியமங்கலத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கடைகளில் மா்மநபா்கள் புகுந்து பணம், சிசிடிவி ஹாா்டு டிஸ்க், வெள்ளிக்காசுகள் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

சத்தியமங்கலம், அத்தாணி சாலையில் உள்ள டிபாா்ட்மெண்ட ஸ்டோரில் புகுந்த மா்ம நபா்கள் அங்கு வைத்திருந்த ரூ.91 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹாா்டு டிஸ்கையும் கழற்றி சென்றுள்ளனா். அதைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள டிவி ஷோரூமில் புகுந்து ரூ. 10 ஆயிரம் ரொக்கம், வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த வெள்ளிக்காசுகள் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

அதைத் தொடா்ந்து இந்த டிவி ஷோரூமை ஒட்டியுள்ள கடையில் நுழைந்து ரூ.2 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடியுள்ளனா். ஒரே நாளில் அத்தாணி சாலையில் அடுத்தடுத்து கடைகளில் நடந்த திருட்டு சம்பவத்தால் மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

SCROLL FOR NEXT