சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 நக்சல்கள் சரண்!
சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 நக்சல்கள் சரணடைந்துள்ளது குறித்து...
சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்துத் தேடப்பட்டு வந்த 108 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவைச் சேர்ந்த பிஜாப்பூரில் 37 மாவோயிஸ்டுகள், தண்டேவாடாவில் 30, சுக்மாவில் 18, பஸ்தாரில் 16, நாராயண்பூரில் 4, கான்கரில் 3 என மொத்தம் 108 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சரணடைந்தவர்களில், ஆறு பேருக்கு தலா ரூ. 8 லட்சம் வெகுமதித் தொகையுடன் கூடிய பிரவு தளபதிகள் ஆவார்.
Advertisement
Advertisement
சரணடைந்த மாவோயிஸ்டுகள் பகிர்ந்துகொண்ட தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் ஒரு பெரிய ஆயுதக் குவியலையும் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டிலிருந்து நக்சல்வாதத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 31, 2026 அன்று காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அதன்படி, சத்தீஸ்கரில் கூட்டாக நக்சல்கள் சரணடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
In a remarkable success of the government's fight against Naxalism, 108 hardened Maoists carrying a cumulative reward of Rs 3.95 crore on their heads surrendered in Chhattisgarh on Wednesday, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.