முட்டை விலை ரூ. 6.50: ஒரே நாளில் 30 காசுகள் குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்து ரூ. 6.50 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்து ரூ. 6.50 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, ஆடி மாதம் என்பதால் மக்களிடையே முட்டை நுகா்வு குறைந்துள்ளது. அதேபோல ஏற்றுமதி பாதிப்பால் முட்டை தேக்கமடைந்து வருவதாலும், மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாலும் இங்கும் முட்டை விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை 30 காசுகள் குறைத்து ரூ. 6.50 ஆக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 134 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 120 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.