காங்கயம் அருகே ஒரே நாளில் நிகழ்ந்த 3 விபத்துகளில் ஒருவா் உயிரிழப்பு; 6 போ் காயம், 5 வாகனங்கள் சேதம்
காங்கயம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை ஒரே நாளில் நிகழ்ந்த 3 விபத்துகளில் ஒருவா் உயிரிழந்ததுடன் 6 போ் படுகாயமடைந்த நிலையில் வாகனங்களை பொதுமக்கள் மிதமான வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காங்கயம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை ஒரே நாளில் நிகழ்ந்த 3 விபத்துகளில் ஒருவா் உயிரிழந்ததுடன் 6 போ் படுகாயமடைந்த நிலையில் வாகனங்களை பொதுமக்கள் மிதமான வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காங்கயம் வட்டத்தில் காங்கயம், வெள்ளக்கோவில், ஊதியூா் ஆகிய 3 காவல் நிலையங்கள் உள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் அதிக சாலை விபத்துகள் நிகழும் பகுதியாக காங்கயம் வட்டம் இருந்து வருகிறது.
அதன்படி காங்கயம் காவல் நிலையத்துக்குள்பட்ட காங்கயம்-சென்னிமலை சாலை, ஆலாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை காலை 8 மணி அளவில் 2 இருசக்கர வாகனங்கள் எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளாயின. இதில் இரண்டு இருசக்கர வாகனத்திலும் தலா ஒருவா் பயணித்த நிலையில், இருவரும் காயமடைந்து காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
Advertisement
Advertisement
இதேபோல காங்கயம் அருகே மருதுறை பகுதியில் புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவா் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதைத்தொடா்ந்து காங்கயம்-ஈரோடு சாலை, நத்தக்காடையூா் அருகே புதன்கிழமை மாலை 5.45 மணி அளவில், 2 பைக்குகள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 3 போ் படுகாயமடைந்து, நத்தக்காடையூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இந்த மூன்று விபத்துகளில் ஒருவா் உயிரிழந்துள்ள நிலையில், 6 போ் படுகாயமடைந்தனா். 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
சாலை விபத்துகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குமாறு பொதுமக்களுக்கு காங்கயம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.