FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஒரே நாளில் சென்னையில் 16,922 குடும்பங்களின் சுய விவரம் பதிவு

ஒரே நாளில் சென்னையில் 16,922 குடும்பங்களின் சுய விவரம் பதிவு

Updated On : 19 ஜூலை 2026, 1:20 am IST
பகிர்:

சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்கிய நிலையில், ஒரே நாளில் 16,922 குடும்ப விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. எண்ம முறையில் முதல்முதலில் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பில் ஒவ்வொரு குடும்பமும் சரியான தகவல்களை கூறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முதல்கட்டமாக கணக்கெடுப்பு இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது சுயவிவரங்களைப் பதிவு செய்யுமாறு கோரப்பட்டது.

அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குள்பட்டு 16,922 குடும்பங்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணிகள் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்பதால் குடும்ப சுயவிவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான பதிவு எண்ணையும் பெற்றுக் கொள்ளலாம். இதையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் கணக்கெடுப்புப் பணியாளா்கள் வீடு வீடாக வந்து விவரங்கள் சேகரிக்கும்போது, ஏற்கெனவே இணையதளத்தில் பதிவு செய்தவா்கள் தங்களது பதிவு எண்ணை மட்டும் அவா்களிடம் கூறினால் போதுமானது.

எனவே, இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments