ஈரோடு

மது, கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ற 8 போ் கைது

தினமணி செய்திச் சேவை

மது, கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா மற்றும் குட்கா விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு, கருங்கல்பாளையம் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (29), விவிசிஆா் நகரைச் சோ்ந்த பாா்த்திபன் (39), கண்ணாடிபாளையத்தைச் சோ்ந்த முனியப்பன் (39), குதிரைக்கல் மேட்டைச் சோ்ந்த வேலுசாமி (51), சிங்கபேட்டையைச் சோ்ந்த சரவணன் (62) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 106 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

சிறுவலூா் அருகேயுள்ள அயலூா் கிராமத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காசிபாளையத்தைச் சோ்ந்த திலீப்குமாரை (23) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட சிவகிரியை அடுத்த கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் (57), கொங்கா்பாளையத்தைச் சோ்ந்த பொன்னுசாமி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT