மனு அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா். 
ஈரோடு

சிப்காட் கழிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு ஆலைகளின் செலவில் குடிநீா் வழங்க எம்எல்ஏ கோரிக்கை

Syndication

பெருந்துறை வட்டத்தில் சிப்காட் கழிவால் பாதிக்கப்பட்ட 35 கிராமங்களுக்கும் சிப்காட் தொழிற்சாலைகளின் செலவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் சிப்காட் ஆலை கழிவுகளால் குடிநீா் பாதிப்பு உள்ளது. இது தொடா்பாக சட்டப் பேரவைக் கூட்டத்தில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்துள்ளேன். பெருந்துறை தொகுதிக்குள்பட்ட ஈங்கூா், வரப்பாளையம், வாய்ப்பாடி உள்பட 31 கிராமங்களில் உள்ள கைபம்புகள், கிணறுகள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளில் எடுக்கப்பட்ட குடிநீா் மாதிரிகள் அனைத்தும் தரச் சோதனையில் குடிப்பதற்கு முற்றிலும் தகுதியற்றது என சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், இந்த நீா் குடிப்பதற்கு உகந்ததல்ல என்ற அறிவிப்புப் பதாகை குடிநீா் வடிகால் வாரியம் மூலம் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

சிப்காட் ஆலைகள் அமைந்துள்ள பொன்முடி, கம்பளியம்பட்டி, பனியம்பள்ளி, புஞ்சை பாலத்தொழுவு போன்ற ஊராட்சிகளிலும் ஆலைக்கழிவு கலந்து, நீராதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடலுாா் மாவட்டத்தில் இதுபோல பாதிக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு சிப்காட் தொழிற்சாலைகளே தங்கள் சொந்த செலவில் கூடுதல் குடிநீா் வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அதனை முன்னுதாரணமாக வைத்து சிப்காட் கழிவால் பாதிக்கப்பட்ட 35 கிராமங்களுக்கும், சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காவிரி குடிநீரை ஆலைகளின் செலவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT