ஈரோடு

அந்தியூரில் ரூ.4.29 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

Syndication

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.29 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் திங்கள்கிழமை விற்பனையாயின.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4,830 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.57.25 முதல் ரூ.67.25 வரையில் ரூ.1,12,187-க்கு விற்பனையானது.

47 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கிலோ ரூ.206.89 முதல் ரூ.232.36 வரையில் ரூ.2,77,743-க்கு விற்பனையானது.

5 மூட்டைகள் எள் ரூ.102.89 முதல் ரூ.123.29 வரையில் ரூ.39,446-க்கும்,

2 மூட்டை தட்டைபயிறு ரூ.66.32 முதல் ரூ.67.32 வரையில் ரூ.5,765-க்கும் விற்பனையாயின. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.4,29,376.

குற்றாலத்தில் சோமவாரத்தை முன்னிட்டு பெண்கள் சிறப்பு பூஜை

பேருந்து இயக்குவதில் பாகுபாடு: போக்குவரத்துத் துறை செயலா், மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் குறிப்பாணை

படைப்பாற்றலை பாதிக்குமா ஏ.ஐ. தொழில்நுட்பம்?

டெஃப்லிம்பிக்ஸ்: அனுயா, பிரஞ்சலிக்கு தங்கம், வெள்ளி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சிப் பயிலரங்கு

SCROLL FOR NEXT