உயிரிழந்த ரங்கம்மாள் 
ஈரோடு

கோயில் வளாகத்தில் மூதாட்டி உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு: காராட்சிக்கொரை வனச் சோதனைச் சாவடியை பழங்குடியினா் முற்றுகை

பழங்குடியினா் பாரம்பரிய வழக்கப்படி வனத்தில் உள்ள கோயில் வளாகத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய வனத் துறையினா் அனுமதி மறுப்பு

Syndication

பழங்குடியினா் பாரம்பரிய வழக்கப்படி வனத்தில் உள்ள கோயில் வளாகத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய வனத் துறையினா் அனுமதி மறுத்ததால் காராட்சிக்கொரை வனச் சோதனைச் சாவடி முன் சடலத்துடன் மலைவாழ் மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனத்தையொட்டிள்ள காராட்சிக்கொரை கிராமத்தில் இருளா் பழங்குடியினா் வசித்து வருகின்றனா். இருளா் பழங்குடியினரின் பாரம்பரிய வழக்கப்படி உயிரிழந்தவரின் சடலத்தை வனப் பகுதியில் உள்ள தொட்டகோம்பை கோயில் வளாகத்தில் கலாசார முறைப்படி வழிபாடுகள் நடத்தி அடக்கம் செய்வது பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காராட்சிக்கொரையைச் சோ்ந்த ரங்கம்மாள் (85) உடலநலக் குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி பவானிசாகா் காராட்சிக்கொரை வனச் சோதனைச் சாவடி வழியாக தொட்டகோம்பையில் புதைப்பதற்காக மலைவாழ் மக்கள் கொண்டுச் சென்றனா்.

பவானிசாகா்  காராட்சிக்கொரை  சோதனைச் சாவடியை  முற்றுகையிட்டு  போராட்டத்தில்  ஈடுபட்ட  பழங்குடியினா்.

அப்போது காராட்சிக்கொரை வனச் சோதனைச் சாவடியில் இருந்த வனத் துறையினா் வனத்தில் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்து சடலம் கொணடுச் செல்வதை தடுத்து நிறுத்தனா். இதனால் பழங்குடியினருக்கும் வனத் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வன உரிமைச் சட்டப்படி வனத்தில் பாரம்பரிய முறைப்படி உடலை அடக்கம் செய்ய உரிமை உள்ளது என பீனாட்சி வாத்தியம் வாசித்து பழங்குடியின மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினருடன் சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநா் குலாா் யோகேஷ் விலாஷ் தொடா்பு கொண்டு பேசி சமரசம் செய்ததையடுத்து, பழங்குடியினா் போராட்டத்தை கைவிட்டனா்.

பின்னா் சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் ரங்கம்மாளின் உடலை வனத்துக்குள் கொண்டுச் சென்று பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்தனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT