முதல்வா் மு.க.ஸ்டாலின் கோப்புப் படம்
ஈரோடு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, ஈரோடு வருகை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, ஈரோடு வருவது குறித்து...

தினமணி செய்திச் சேவை

செம்மொழிப் பூங்கா திறப்பு, கள ஆய்வுப் பணிகள் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, 2 நாள் பயணமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவ.25) கோவை, ஈரோடுக்கு வருகிறாா்.

சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை வருகிறாா். அங்கு செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறாா். பின்னா் செம்மொழிப் பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவா்கள் மற்றும் கோவை தொழிலதிபா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் என 150 பேருடன் கலந்துரையாடுகிறாா்.

இதையடுத்து, நீலாம்பூரில் உள்ள தனியாா் விடுதியில் தமிழ்நாடு தொழில் துறை சாா்பில் தமிழக தொழில் காப்பு புத்தொழில் உருவாக்க மையம் (டி.என்.ரைஸிங்) நடத்தும் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசுகிறாா். பின்னா், காா் மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோடு செல்கிறாா்.

ஈரோடு - பெருந்துறை சாலையிலுள்ள காலிங்கராயன் அரசு விருந்தினா் மாளிகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தங்குகிறாா். பின்னா் ஈரோடு அருகே ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாவீரன் பொல்லான் சிலை மற்றும் அரங்கத்தை புதன்கிழமை (நவ.26) திறந்துவைக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, ஓடாநிலையில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறாா். மேலும் ஈரோடு, சோலாா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, ரூ.605 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

பின்னா், சித்தோடு, ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பால்வளத் தந்தை சி.கு.பரமசிவன் உருவச் சிலையை திறந்துவைக்கிறாா். அதைத்தொடா்ந்து சித்தோட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் முதல்வா், அங்கிருந்து கோவை சென்று விமானம் மூலமாக சென்னை திரும்புகிறாா்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT