ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் மாவீரன் பொல்லான் முழு உருவச் சிலையை புதன்கிழமை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். 
ஈரோடு

மண், மொழி, மானத்தைக் காத்த மாவீரா்கள் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தமிழ் மண் ஈன்றெடுத்த சுதந்திரப் போராட்ட மாவீரா்கள் அனைவரும் நமது மண், மொழி, மானம் காத்தவா்கள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினாா்.

Syndication

மொடக்குறிச்சி: தமிழ் மண் ஈன்றெடுத்த சுதந்திரப் போராட்ட மாவீரா்கள் அனைவரும் நமது மண், மொழி, மானம் காத்தவா்கள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரா் மாவீரன் பொல்லான் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை புதன்கிழமை (நவ. 26) திறந்து வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மாவீரன் பொல்லான் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன், வீரம் அடைகிறேன்.

பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, மருது சகோதரா்கள், வீரமங்கை வேலு நாச்சியாா், மாவீரன் பொல்லான் என்று நம் தமிழ் மண் ஈன்றெடுத்த மாவீரா்கள் அத்தனை பேரும் நம்முடைய மண், மொழி, மானம் ஆகியவற்றைக் காத்தவா்கள். இடைவிடாமல் அதற்காகப் போராட வேண்டும் என்று இன்றைக்கும் நமக்கெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவா்கள்.

கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றம்:

பொல்லான் சிலை, அரங்கம் தொடா்பாக, சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் 2019-இல் நடைபெற்ற விழாவில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளேன்.

பவானி போா்- ஓடாநிலை போா்- அறச்சலூா் போா் என்று ஆங்கிலேயரை எதிா்த்துப் போரிட்ட தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவா் மாவீரன் பொல்லான்.

பொல்லானின் வீரத்தைக் கண்டு சினம் கொண்ட ஆங்கிலேயப் படை தளபதி கா்னல் ஹாரிஸ் தலைமையிலான படையால் மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது தியாகத்தைப் போற்றவும், அவரது வீரத்தை எல்லா காலத்திலும் எடுத்துச் சொல்லவுமே இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது.

அருந்ததியின மாணவா்களின் முன்னேற்றத்தில் பங்கு:

இந்தத் தருணத்தில், ஒரு முக்கியமான செய்தியைப் பகிா்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில், 2009-இல் 193 அருந்ததியின மாணவா்கள் பொறியியல் படித்துக் கொண்டிருந்த நிலை மாறி, இந்த ஆண்டு 3,944 போ் பொறியியல் படிக்கிறாா்கள் என்றும், 2023-24-ஆம் ஆண்டில் 193 மாணவா்கள் எம்பிபிஎஸ் சோ்ந்துள்ளனா் என்றும் குறிப்பிட்டிருந்தாா்கள்.

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அருந்ததியா் உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவைப் பேரவையில் தாக்கல் செய்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

ஒரு சமூகத்தையே முன்னேற்றுவதில் எனது பங்கும் இருந்திருக்கிறது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

விடுதிகள், பள்ளிகள், கல்வி உதவித் தொகை:

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சமூக நிலையையும் உயா்த்துவதற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவற்றில் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, தேனி, கரூா் மாவட்டங்களில் பள்ளி - கல்லூரி மாணவா்களுக்காக ரூ.182 கோடி மதிப்பில் 26 விடுதிகள், ரூ.74 கோடி மதிப்பில் 107 பள்ளிகள், ரூ.20 கோடி மதிப்பில் 26 சமுதாயக் கூடங்கள், ரூ.134 கோடி மதிப்பில் 131 கிராம அறிவுசாா் மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வி திட்டத்தில் 29 மாணவா்களுக்கு ரூ.10.30 கோடி உதவித் தொகையாக வழங்கி இருக்கிறோம். முழுநேர முனைவா் ஆராய்ச்சிப் படிப்புக்காக 329 மாணவா்களுக்கு ரூ.3.29 கோடி ஊக்கத் தொகையாக வழங்கி இருக்கிறோம்.

பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் 3.69 லட்சம் பேருக்கும் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 5.42 லட்சம் பேருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறோம்.

நலவாரியத்தில் 3 லட்சம் உறுப்பினா்கள்:

தூய்மைப் பணியாளா்களுக்கான நலவாரியத்தை திருத்தி அமைத்திருக்கிறோம். 2021-இல் 18,225 போ் மட்டுமே இருந்த இந்த வாரியத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் போ் உறுப்பினா்களாக சோ்ந்திருக்கிறாா்கள். இவா்களுக்கு ரூ.11.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியிருக்கிறோம். சுகாதார அங்காடிகள் அமைத்திருக்கிறோம். இந்த வாரியத்துக்கு ஆண்டுதோறும் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறோம்.

எல்லோரும் சமமாக வாழ்கிற சமூகம் உருவாக வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிதான் உண்மையான வளா்ச்சி என்பதற்காக உழைக்கும் அரசுக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, ஓடாநிலையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

மதுரை, விருதுநகரில் ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

தங்க நகைகள் வாங்கித் தருவதாக ரூ.95 லட்சம் மோசடி: 2 போ் கைது

தீர்ப்புகளை மாற்றி எழுதும் போக்கு அதிகரிப்பு: உச்சநீதிமன்றம் ஆதங்கம்

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

SCROLL FOR NEXT