ஈரோடு

சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே, சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

பெருந்துறை அருகே, சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பூா், போயம்பாளையத்தைச் சோ்ந்தவா் சம்பத் (48), கட்டடத் தொழிலாளி. இவா், ஈரோடு மாவட்டம், பவானியை நோக்கி இருசக்கர வாகனத்தில் கடந்த 19-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.

பெருந்துறையை அடுத்த சோளிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையில் விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷியாவுடன் ஒப்பந்தம்!

தேவதை வாசம்... நியதி பட்னானி!

ஒளிரும் விளக்கு... நந்தனி குமாரி!

பைசன் படப்பிடிப்பில்... அனுபமா பரமேஸ்வரன்!

தங்கக் கவசம்... இஷானி கிருஷ்ணா!

SCROLL FOR NEXT