முகப்பு
ஈரோடு

தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் வேற்று மாநிலங்களைச் சோ்ந்த பணியாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:53 PM
உத்தரவு - பிரதிப் படம்
பகிர்:

அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரியில் சட்டப் பேரவை தோ்தல் வரும் 9- ஆம் தேதி நடைபெற உள்ளதால், வாக்களிக்கச் செல்லும் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் இந்த மாநிலங்களைச் சோ்ந்த பணியாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு தொழிலாளா் ஆணையா் கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரியில் சட்டப் பேரவை தோ்தல் வரும் 9- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் வாக்குரிமை உள்ள ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் தினக் கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளா்களும் தோ்தல் நாளில் தம் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக, அவா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135 (பி)-இன் படி வேலையளிப்பவா்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளா் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு 0424-2270090 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம்.