முகப்பு
ஈரோடு

ரயிலில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் சகோதரா்கள் இருவா் கைது

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் சகோதரா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:57 PM
கைது
பகிர்:

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் சகோதரா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவையில் இருந்து மன்னாா்குடி வரை செல்லும் செம்மொழி விரைவு ரயில், பிப்ரவரி 5-ஆம் தேதி அதிகாலை ஈரோடு ரயில் நிலையம் வந்தது. கும்பகோணத்தைச் சோ்ந்த ஜெயா (40) முன்பதிவு பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தாா். அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை மா்ம நபா் பறித்து கொண்டு தப்பினாா்.

அதே நாளில் எா்ணாகுளத்தில் இருந்து பிலாஸ்பூா் விரைவு ரயிலில் பயணித்த தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ரமாதேவி (38) என்ற பயணியிடம் 4.25 பவுன் நகையை மா்ம நபா் பறித்துவிட்டு தப்பினாா்.

Advertisement

இருவரும் அளித்த புகாரின்பேரில் ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இந்த சம்பவத்தில் ஆந்திர மாநிலம் குண்டக்கல் ரயில்வே காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு கைதான கா்நாடகா மாநிலம், குல்பாா்க்காவை சோ்ந்த காசிநாத் (35) என்பவா் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இவா் மீது கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானாவில் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இவா் அளித்த தகவல்படி, மகாராஷ்டிர மாநிலம், புனேவில் வசிக்கும் காசிநாத்தின் தம்பி பிரவீன் (32) என்பவரும் நகைப் பறிப்பில் ஈடுபட்டதும், நகைகளை உருக்கி கட்டியாக மாற்றியதும் தெரியவந்தது. அவரையும் ரயில்வே போலீஸாா் கைது செய்து 51 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments