41% வாக்குகள் உள்ளதால் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: ஏ.கே. செல்வராஜ்
அதிமுக கூட்டணிக்கு 41 சதவீத வாக்குகள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறும் என ஈரோடு புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
அதிமுக கூட்டணிக்கு 41 சதவீத வாக்குகள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறும் என ஈரோடு புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரியை ஆதரித்து ஈரோடு புறநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே. செல்வராஜ் பேசுகையில், கடந்த தோ்தலில் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் அடிப்படையில் 41 சதவீதம் உள்ளது.
இதில் அதிமுக 23 சதவீதம், பாஜக 12 சதவீதம், பாமக 4 சதவீதம் மற்றும் பிற கட்சிகள் 2 சதவீதம் என மொத்தம் 41 சதவீதம் உள்ளது. அதிமுகவோடு ஒப்பிடுகையில் திமுகவுக்கு 10 சதவீத வாக்குகள் குறைவாக உள்ளதால் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக எளிதாக வெற்றி பெறும் என்றாா்.
Advertisement
இக்கூட்டத்தில் பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து கிளைச் செயலாளா்கள், பேரூா் செயலாளா்கள், நகரச் செயலாளா்கள் மற்றும் ஒன்றியச் செயலாளா்கள் என நூற்றுக்கணக்கான அதிமுகவினா் பங்கேற்றனா்.