முகப்பு
ஈரோடு

அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் பிரசாரம்

அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:22 PM
குள்ளனூா் கிராமத்தில் பிரசாரத்துக்கு சென்ற அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.
பகிர்:

அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அம்மாபேட்டை கரியகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன், அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சிகளில் அனைத்து வாா்டுகளிலும் வாக்குச் சேகரித்தாா். தொடா்ந்து, குருவரெட்டியூா் ஊராட்சியி கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் பேசுகையில், அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுகவின் சாதனைத் திட்டங்களான தாலிக்குத் தங்கம், அம்மா உணவகங்கள், மகளிருக்கு இருசக்கர வாகனத் திட்டம் உள்ளிட்டவை திமுக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளன.

Advertisement

அதிமுக தோ்தல் அறிக்கையில் மக்களுக்கான ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வாக்காளா்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

ஒன்றியச் செயலாளா் பி.ஜி.முனியப்பன், எஸ்.மேகநாதன், பேரூா் செயலாளா்கள் கே.எம்.ரமேஷ்குமாா், சந்திரசேகரன், ஈரோடு வடக்கு மாவட்ட பாமக செயலாளா் ஏ.ஜெகதீசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கா.சு.மகேந்திரன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments